ஏன் இந்த கொலைவெறி?

13 ஆகஸ்ட் 2017, 01:44 AM

'அனி­மல் ஸ்டார்' என்று தனக்­குத்­தானே அடை­மொழி கொடுத்து கொண்டு ஹீரோ­வாக கள­மி­றங்கி இருக்­கி­றார் சாம்­பார் ராசன் என்­ப­வர். இவர் நடிக்­கும் படத்­துக்கு ‘மாட்­டுக்கு நான் அடிமை’ என்று டைட்­டில்.

'ஏன் இந்த கொலை­வெறி?' என்று கேட்­டால், ''மாட்­டுக்­கா­கவே வாழ்ந்து மாட்­டுக்­கா­கவே உயிரை விட தயா­ரான ஒரு­வ­னின் கதைதான் இந்த படம். அத­னால்­தான் இந்த டைட்­டில்'' என்­கி­றார்.

'அப்போ சாம்­பார் ராசன்?' ''நம் மக்­கள் சாம்­பார் பிரி­யர்­கள். எல்­லோர் வீட்­டி­லும் சாம்­பார் தவ­றா­மல் இடம்­பெ­றும் இல்­லையா? அந்த மாதிரி எல்­லோர் மன­தி­லும் இடம்பிடிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே, பெய­ரையே இப்­படி மாற்றி கெஜட்­டி­லும் பதிந்து விட்­டேன்'' என ஆச்­சரியப்­ப­டுத்­து­கி­றார்.

இவர் அடித்­துச் சொல்­லும் இன்­னொரு விஷ­யம், ''என்னை மாதிரி யாரா­லும் படம் எடுக்க முடி­யாது'' என்­பது. வேறு நடி­கர்­க­ளின் படங்­க­ளில் நடிக்க வாய்ப்பு வந்­தால் நடிக்கமாட்­டா­ராம். ஹீரோ­வாக மட்­டும்­தான் நடிப்­பா­ராம். இதை­யெல்­லாம் சீரி­ய­சா­கத்­தான் சொல்­கி­றாரா என்­றால், ''ஆமா. சீரி­யஸ்­தான். என்­னைப் பார்த்து எல்­லோ­ரும் சிரிக்­க­ணும்'' என்­கி­றார்.

இதில் இவ­ருக்கு 2 ஹீரோ­யின்­கள். ஒரு­வர், ‘கோலி சோடா’ சீதா, இன்­னொ­ரு­வர் சவுந்­தர்யா. காமெ­டிக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து இளை­ய­கு­மார் பி.கே என்­ப­வர் இயக்­கி­யி­ருக்­கி­றார்.