அசத்தல்!

11 ஆகஸ்ட் 2017, 02:21 AM

தமிழ், தெலுங்­கில் முன்­னணி கதா­நா­ய­கி­க­ளில் ஒரு­வ­ராக இருப்­ப­வர் காஜல் அகர்­வால். பெரிய நாய­கர்­க­ளு­டன் பெரிய படங்­க­ளில் மட்­டுமே நடிப்­பார். தமி­ழில் கடை­சி­யாக, ஜீவா­வு­டன் காஜல் அகர்­வால் நடித்த 'கவலை வேண்­டாம்' படம் தோல்­வி­ய­டைந்­தது. அந்த படத்­தில் முத­லில் கீர்த்தி சுரேஷ்­தான் நடிக்க ஒப்­பந்­த­மா­னார். ஜீவா குடும்­பத்­தி­னர் தயா­ரித்த 'ஜில்லா' படத்­தில் விஜய் ஜோடி­யாக நடித்­த­தால், அந்த நட்­பில் ஜீவா படத்­தில் நடிக்க சம்­ம­தித்­தார். கடை­சி­யில், 'கவலை வேண்­டாம்' படம் அவரை வாரி விட்­டது. அத­னால், நடித்­தால் இனி பெரிய ஹீரோக்­க­ளு­டன் மட்­டுமே என முடி­வெ­டுத்து தற்­போது அஜீத்­து­டன் 'விவே­கம்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். விஜய்­யு­டன் 'மெர்­சல்' படத்­தில் நடித்து வரு­கி­றார்.  24ம் தேதி தமி­ழில் வெளி­யா­கும் 'விவே­கம்' படத்­திற்­கா­க­வும் காத்­தி­ருக்­கி­றார். அஜீத் ஜோடி­யாக முதல் முறை­யாக காஜல் நடித்­தி­ருக்­கும் படம் இது. ஒரே மாதத்­தில் இரு மொழி­க­ளில், இரண்டு பெரிய படங்­கள் என இந்த மாதத்­தில் அசத்த போகி­றவர் காஜல் அகர்­வால் மட்­டுமே.