‘என் ஆளோட செருப்ப காணோம்!’

11 ஆகஸ்ட் 2017, 02:19 AM

'''கயல்' ஆனந்­தி­யோட செருப்பு காணா­மல் போய் விடு­கி­றது. அது வெறும் செருப்­பு­தானே அதுக்கு ஏன் இம்­புட்டு பீலிங்க்ஸுன் நாம சும்மா போக முடி­யாது. ஏன்னா, அதுக்கு பின்­னாடி ஒரு வலு­வான கார­ணம் இருக்கு. அப்­ப­டி­யான வர­லாற்றை கொண்ட செருப்பை ஹீரோ தமிழ் கண்­டு­பி­டிக்க தேடு­றார். அது­தான் கதை. செருப்­புங்­கி­றதை காலில் அணி­கிற ஒரு அரு­வ­ருப்­பான பொரு­ளாக நீங்­கள் உணர முடி­யாது. அந்த செருப்­புக்­குள்ளே ஒரு எமோ­ஷ­னல் பீலிங் இருக்கு. ஒரு பேனா மூடி தொலைஞ்சு போயிட்டா மூடி இல்­லா­மலேயே அந்த பேனா­வைப் பயன்­ப­டுத்­த­லாம். ஆனால், நீங்க போட்­டி­ருக்­கி­ற­துல ஒரு செருப்பு தொலைஞ்சு போய்ட்­டா­லும் இன்னொன்னையும் பயன்­ப­டுத்­தவே முடி­யாது. ஜோடியா இருந்­தா­தான் செருப்­புக்கு சிறப்பு. காத­லோட சூத்­தி­ரமே செருப்­பு­ல­தான் பாஸ் இருக்கு. இப்­படி பேச தொடங்­கி­னார் 'என் ஆளோட செருப்ப காணோம்' படத்­தோட இயக்­கு­னர் ஜெகன். இவர் ஏற்­க­னவே 'புதிய கீதை', 'கோடம்­பாக்­கம்', 'ராமன் தேடிய சீதை' படங்­களை இயக்­கி­ய­வர். இப்­ப­டத்­தின் நாய­க­னாக 'கோலி சோடா' பாண்டி நடித்­துள்­ளார். அவ­ருக்கு தமிழ் என பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. மற்­றும் கே.எஸ். ரவி­கு­மார், யோகி பாபு, சிங்­கம்­புலி, ஜெய­பி­ர­காஷ் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ளார்­கள். இப்­ப­டத்தை டிரம்ப் ஸ்ட்ரிக் புரொ­டக் ஷன் சார்­பாக எஸ். சக்­தி­வேல் தயா­ரித்­துள்­ளார்.