என் லக்கி ஹீரோ!

11 ஆகஸ்ட் 2017, 02:18 AM

தமி­ழில் கலக்­கிய ஸ்ரேயா, தற்­போது பால­கி­ருஷ்ணா நடித்து வரும் 'பைசா வசூல்' படத்­தில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார்.

இது பற்றி ஸ்ரேயா கூறு­கை­யில், ''100 படங்­க­ளுக்கு மேல் நடித்­து­விட்ட பால­கி­ருஷ்ணா எனது லக்கி ஹீரோ. கார­ணம், அவ­ரு­டன் இதற்கு முன்பு 'சென்னே கேசவ ரெட்டி', 'கவு­தமி புத்­ர­சட்­ட­கர்னி' ஆகிய இரண்டு படங்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றேன். அந்த இரண்டு படங்­க­ளுமே எனக்கு தெலுங்­கில் ஹிட்­டாக அமைந்­தன. அந்த சென்டிமென்ட் கார­ண­மாக இப்­போது 'பைசா வசூல்' படத்­தி­லும் என்னை நடிக்க வைத்­துள்­ள­னர். கதைப்­படி இந்த படத்­தில் நான் ஒரு பத்­தி­ரிகை நிரு­பர் வேடத்­தில் நடிக்­கி­றேன். கதைக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இந்த வேடத்­திற்­கும் ஒரு பின்­னணி கதை படத்­தில் உள்­ளது'' என்­கி­றார்.