‘கூட்டாளி!’

11 ஆகஸ்ட் 2017, 02:17 AM

எஸ்பி பிக்­செல்ஸ் சார்­பாக எஸ். சுரேஷ்பாபு, பி. பெரு­மாள்சாமி இணைந்து தயா­ரிக்­கும் படம் 'கூட்­டாளி.' இப்­ப­டம் விரை­வில் திரைக்கு வர இருக்­கி­றது.

''பெற்­றோரால் புறக்­க­ணிக்­கப்­பட்ட நால்­வர் நண்­பர்­க­ளாக, அவர்­க­ளோடு ஒரு பெண்­ணும் தோழி­யா­கி­றார். வாழ்­வி­லும் தொழி­லி­லும் ஒரு தோழி­யால் வரும் பிரச்­னை­க­ளை­யும், அதனை அவர்­கள் எப்­படி எதிர்­கொள்­கி­றார்­கள் என்­பதை ஜன­ரஞ்­ச­க­மா­க­வும், விறு­வி­றுப்­பு­ட­னும், பட­மாக்கி இருக்­கி­றோம்'' என்­கி­றார் இதற்கு கதை, திரைக்­கதை, வச­னம் எழுதி இயக்­கி­யுள்ள இயக்­கு­னர் எஸ்.கே. மதி.

முற்­றி­லும் புதுமுகங்­களை வைத்து உருப்­பெ­றும், இத்­தி­ரைப்­ப­டத்­தில் சதீஷ் கதா­நா­ய­க­னா­க­வும், கிரிஷா குரூப் கதா­நா­ய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர்.

இவர்­க­ளு­டன் கல்­யாண், அருள் தாஸ், கவுசல்யா, உத­ய­பானு மகேஸ்­வ­ரன், போஸ்­டர் நந்­த­கு­மார், அப்­புக்­குட்டி, கலை­ அ­ர­சன், அன்­பு­ராஜ் ஆகி­யோ­ரும் திரையை பகிர்ந்து கொள்­கின்­ற­னர்.  ஒளிப்­ப­தி­ – சுரேஷ் நட­ரா­ஜன்,  படத்­தொ­குப்பு  – பிர­ஷாந்த் தமிழ்­மணி,  நடன அமைப்பு – கல்­யாண், ரமேஷ், மற்­றும் கலை – சிவக்­கு­மார், சண்­டைக்­காட்சி அமைப்பு  – ராம்போ விமல் ஆகி­யோர் இணைந்து இப்­ப­டத்­தில் பணி­யாற்றி இருக்­கி­றார்­கள். இத்­தி­ரைப்­ப­டத்­திற்கு பிரிட்டோ மைக்­கேல் என்­ப­வர் இசை­ய­மைத்­தி­ருக்­கி­றார்.விரை­வில் இத்­தி­ரைப்­ப­டம் வெளி­யாக உள்­ள­தாம்.