ஓநாய்க்கு அலறிய நாயகி!

11 ஆகஸ்ட் 2017, 02:16 AM

அபி சர­வ­ணன், யோகி, காயத்ரி, அகல்யா நடிக்­கும் படம், ‘இவன் ஏடாகூட­மா­ன­வன்’. கிருஷ்­ண­கிரி அக்­ர­ஹார மலை உச்­சி­யில் படப்­பி­டிப்பு நடந்த போது ஓநாய் வந்­த­தால் நடிகை காயத்ரி அல­றி­ய­டித்து ஓடி­னார். இது குறித்து இயக்­கு­னர் ஜெஸ்­டின் திவா­கர் கூறி­ய­தா­வது: ''வாடி பக்­கத்­திலே ஒன்ன சேர்ப்­பேன்'' என்ற பாடல் காட்சி கிருஷ்­ண­கிரி அருகே உள்ள மலைப்­ப­கு­தி­யில் நடந்­தது. அப்­போது திடீ­ரென்று ஒரு ஓநாய் நுழைந்­தது. அதைக்­கண்டு ஹீரோ­யின் காயத்ரி அல­றி­னார். உடனே நானும், பட குழு­வி­ன­ரும் தீப்­பந்­தத்­து­டன் அதை விரட்­டி­னோம். பயத்­தில் நடுங்­கிய காயத்­ரியை அறைக்கு சென்று ஓய்வு எடுக்­கும்­படி கூறி­னேன்.

இந்த சம்­ப­வத்­தால் சில மணி­நே­ரம் படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டது. பிறகு ஷூட்­டிங் தொடர்ந்­தது. அர­சி­யல் செல்­வாக்­குள்­ள­வர்­கள் சில­ரின் சட்­ட­வி­ரோத செய­லால் பாதிக்கப்படும் இளை­ஞன் அவர்­களை எதிர்க்­கும் கதை­யாக இப்­ப­டம் உரு­வா­கி­றது. எஸ். சைலேஷ், சிவ­ராஜா தயா­ரிப்பு. ஆதி. கருப்­பையா ஒளிப்­ப­திவு. வித்­யா­ஷ­ரன் இசை. இதன் ஆடியோ சமீ­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.