போட்டோ வைரல்!

18 ஜூன் 2017, 12:42 AM

'வீர­சே­க­ரன்' படத்­தில் அறி­மு­க­மான அம­லா­ பால், 'சிந்து சம­வெளி' படத்­தில் நடித்த போது ஆபாச நடிகை என்ற விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளா­னார். என்­றா­லும், அதை­ய­டுத்து பிர­பு­ சா­ல­ம­னின் 'மைனா' படத்­தில் நடித்து தன் மீது விழுந்த  இமே­ஜில் இருந்து விடு­பட்­டார். பின்­னர், நல்ல கதை­க­ளாக தேர்ந்­தெ­டுத்து நடித்­த­வர், ஏ.எல். விஜய் இயக்­கிய 'தெய்­வத்­தி­ரு­ம­கள்' படத்­தில் நடித்த போது அவரை காத­லித்­தார். அதை­ய­டுத்து விஜய்யை வைத்து ஏ.எல். விஜய் இயக்­கிய 'தலைவா' படத்­தி­லும் நடித்த அம­லா­ பால், பின்­னர் டைரக்­டர் ஏ.எல். விஜய்யை திரு­ம­ணம் செய்து கொண்­டார். என்­றா­லும் ஓராண்­டி­லேயே அவர்­க­ளுக்­கி­டையே பிரிவு ஏற்­பட்டு விவா­க­ரத்து செய்து கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், தற்­போது மீண்­டும் பிசி­யான நடி­கை­யாகி விட்­டார் அம­லா­ பால். தனு­ஷு­டன் 'வேலை­யில்லா பட்­ட­தாரி- 2' படத்­தில் நடித்­தி­ருப்­ப­வர், 'திருட்­டுப் பயலே- 2,' 'பாஸ்­கர் ஒரு ராஸ்­கல்' என பல படங்­க­ளில் தற்­போது நடித்து கொண்­டிக்­கி­றார். அதோடு, இப்­போது முன்பை விட கிளா­ம­ரா­க­வும் நடித்து வரும் அம­லா ­பால், தனது டுவிட்­ட­ரில் தற்­போது ஒரு ஹாட் போட்டோ வெளி­யிட்­டி­ருக்­கி­றார். அத்­து­டன், எனக்­குள் இருக்­கும் நெருப்­பு­தான் என்னை இங்கு பிழைக்க வைக்­கி­றது என்­றும் பதி­விட்­டுள்­ளார். அம­லா­ பால் வெளி­யிட்­டுள்ள இந்த கிளா­மர் போட்டோ இணை­ய­த­ளங்­க­ளில் வைர­லாகி வலம் வந்து கொண்­டி­ருக்­கி­றது.