இனிஷியலாக வைத்த மன்னன்!

18 ஜூன் 2017, 12:41 AM

தெலுங்­கில் பால­கி­ருஷ்ணா நடிப்­பில் பிரம்­மாண்ட பட­மாக உரு­வாகி வெற்­றிபெற்ற படம் ‘கவு­தமி புத்ர சாத­கர்ணி’. பால­கி­ருஷ்­ணா­வின் 100வது பட­மான இந்த படத்தை தமி­ழில் ‘வானம்’ படத்தை இயக்­கிய அஞ்­சனா புத்ர கிருஷ் இயக்­கி­யி­ருந்­தார். தெலுங்­கில் வெளி­யாகி  வெற்­றிபெற்ற இந்த படம் தமி­ழில் அதே பெய­ரில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. ரகு­நாத் வழங்­கும் ‘ஆர்.என்.சி.சினிமா’ படநிறு­வ­னம் சார்­பாக நரேந்த்ரா தயா­ரித்­துள்ள இந்த படத்­தில் பால­கி­ருஷ்­ணா­வு­டன் ஸ்ரேயா கதா­நா­ய­கி­யாக நடித்­துள்­ளார். மற்­றும் கபீர் பேடி, தணி­க­ல­ப­ரணி, சுப­லேகா சுதா­கர், பாலி­வுட் நடிகை ஹேம­மா­லினி ஆகி­யோ­ரும் நடித்­தி­ருக்­கும் இந்த படத்­தின் டிரெ­ய்­லர் வெளி­யீட்டு விழா  சென்­னை­யில் நடை­பெற்­றது. இந்த விழா­வில் படக்­கு­ழு­வி­ன­ரு­டன் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகி­யோ­ரு­டன் பல படங்­க­ளில் நடித்த லதா, ‘வெண்­ணிற ஆடை’ நிர்­மலா ஆகி­யோர் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக கலந்து கொண்­ட­னர்.

நாட்­டுக்­காக  போரா­டிய ஒரு மாவீ­ரன் சாத­கர்ணி. நாட்­காட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர், இந்­தியா முழுக்க ஒரே நாண­யம் இருக்க வேண்­டும் என்று போரா­டி­ய­வர், தாய்க்கு மரி­யாதை செய்­யும் வித­மாக தன் தாயின் பெயரை இனி­ஷி­ய­லாக போட்டு முன்மாதி­ரி­யாக திகழ்ந்­த­வர் என்று பல பெரு­மை­க­ளுக்கு சொந்­த­க்கா­ர­ரான மாவீ­ரன் சாத­கர்ணி, மன்­னர் சேர­னின் நண்­ப­ரா­க­வும் திகழ்ந்­துள்­ளார். நம் நாட்­டுக்­காக போரா­டிய இந்த மாவீ­ரன் பற்­றிய அதிக தக­வல்­கள் இந்­தி­யா­வில் இல்­லாத நிலை­யில் லண்­டன் மியூ­சி­யத்­திற்­குச் சென்று, தக­வல்­களை சேக­ரித்து வந்து இந்த படத்தை இயக்­கி­யி­ருக்­கி­றார் கிருஷ்! 79 நாட்­க­ளில் எடுத்து முடிக்­கப்­பட்ட பிரம்­மாண்ட படம் என்ற பெரு­மை­யும் உள்ள இந்த படத்தை இந்­தி­யா­வில் உள்ள பல உண்­மை­யான அரண்­ம­னை­க­ளில் பட­மா­க்கி­யுள்­ள­னர். தமி­ழில் மரு­த­ப­ரணி வச­னங்­களை எழு­தி­யி­ருக்­கி­றார். விரை­வில் இந்த படம் வெளி­யா­க­வி­ருக்­கி­றது.