‘கிடா விருந்து!’

18 ஜூன் 2017, 12:40 AM

'கிடா விருந்து' என்ற பெய­ரில் புதிய படத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் ஏ.எஸ். தமிழ்ச்­செல்­வன். கே.பி.என். சினி சர்க்­யூட் தயா­ரிக்­கும் இப்­ப­டத்­தில் நாய­க­னாக எஸ்.பி. பிர­சாத், நாய­கி­யாக ஷாலினி நடிக்­கி­றார்­கள். இவர்­க­ளு­டன் கஞ்சா கருப்பு, ரஞ்­சன், மகேஷ்­வர் சேரன்­ராஜ், சுகி, ராணி உள்­ளிட்ட பலர் நடிக்­கி­றார்­கள். பிரின்ஸ் நல்­ல­தம்பி இசை­ய­மைத்­துள்ள இப்­ப­டத்­திற்கு எஸ்.ஆர். வெற்றி ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். இப்­ப­டம் பற்றி இயக்­கு­ன­ரி­டம் கேட்­ட­போது…

''ஒரு செல்­வந்­த­ரின் பிள்­ளை­க­ளான நால்­வ­ரும் பொறுப்­பின்றி சுற்­றித் திரி­கின்­றார்­கள். ஒரு கட்­டத்­தில் நிலை­த­டு­மாறி விழும்­போது தங்­க­ளின் நிலையை உணர்­கி­றார்­கள். அந்த தடு­மாற்­றத்­தி­லி­ருந்து அவர்­கள் மீள்­கி­றார்­களா, இல்­லையா என்­பதை இந்த 'கிடா விருந்து' படத்­தில் சொல்லி இருக்­கி­றோம். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு மேட்­டூர், சேலம், குரு­ம­னூர் உள்­ளிட்ட சில மலைக்­கி­ரா­மங்­க­ளி­லும் பட­மாக்­கி­யுள்­ளோம். விரை­வில் ரிலீஸ் செய்ய உள்­ளோம்'' என்­றார்.