வாரிசு!

18 ஜூன் 2017, 12:39 AM

தமிழ் சினிமா மற்­றும் சின்­னத்­தி­ரை­யில் குணச்­சித்­திர வேடங்­க­ளில் நடித்து வரு­கி­ற­வர் அஜய் ரத்­னம். இவ­ரது மகன் தீரஜ் ரத்­னம் இப்­போது சினிமா நடி­க­ராகி விட்­டார். மிஷ்­கின் இயக்­கும் 'துப்­ப­றி­வா­ளன்' படத்­தில் விஷா­லுக்கு வில்­ல­னாக நடித்து வரு­கி­றார். இது­ த­விர வேறு சில படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார். சுந்­தர். சி இயக்­க­வி­ருக்­கும் 'சங்­க­மித்ரா' படத்­தி­லும் முக்­கிய கேரக்­ட­ரில் நடிக்­கி­றார். இது­ கு­றித்து தீரஜ் ரத்­னம் கூறி­ய­தா­வது:

''எங்­கள் குடும்­பத்­தில் எல்­லோ­ரும் படித்து நல்ல வேலை­யில் இருப்­ப­வர்­கள். நானும் ஐ.பி.எஸ்ஸுக்கு படித்­தேன். ஆனால் எனது கவ­னம் விளை­யாட்டு, சினிமா என்று திரும்­பி­யது. வெயிட் லிப்­டிங் சாம்­பி­யன் ஆனேன். அப்பா 6 அடி உய­ரம், நான் 6.4 அடி உய­ரம், சிக்ஸ் பேக் உடம்பு, இதை பார்த்து தெலுங்கு படம் ஒன்­றில் வில்­ல­னாக நடிக்க அழைத்­தார்­கள். அப்­ப­டியே நடிக்க வந்து விட்­டேன். தமி­ழில் அறி­வ­ழ­கன் இயக்­கிய 'ஆறாது சினம்' படத்­தில் அறி­மு­க­மா­னேன். இப்­போது பல படங்­க­ளில் நடித்து வரு­கி­றேன். ஏன் வில்­ல­னாக நடிக்­கி­றீர்­கள் என்று கேட்­கி­றார்­கள். என் தோற்­றத்­துக்கு அது­தான் சரி­யாக இருக்­கும் என்று முடிவு செய்­தேன். சினி­மா­வில் இளம் வில்­லன்­கள் குறைவு. அத­னால்தான் மும்­பை­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­கி­றார்­கள் என்­றார்­கள். எனவேதான் வில்­ல­னாக நடிப்­பது என்று முடிவு செய்­தேன்.''