எதிர்பார்ப்பில் ‘விஜய் 61!’

16 ஜூன் 2017, 11:49 PM

ராஜஸ்­தா­னில் விஜய்-, நித்யா மேனன், ஐரோப்­பா­வில் விஜய் – -காஜல் அகர்­வால் ஆகி­யோர் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை பட­மாக்­கி­விட்டு, தற்­போது சென்­னை­யில் முகா­மிட்­டி­ருக்­கி­றது அட்லி அண் கோ. இப்­ப­டத்­தில் வடி­வே­லுவை தொடர்ந்து மேலும் 2 காமெ­டி­யர்களாக சத்­ய­னும், யோகி பாபு­வும் ‘விஜய் 61’ல் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­க­ளும் தற்­போ­து­தான் பட­மாக்­கப்­பட்டு வரு­கி­ற­தாம்.
இப்­ப­டம் குறித்து, ‘‘'விஜய் 61' படம் ரொம்­பவே திருப்­தியா வந்­தி­ருக்கு. பர்ஸ்ட் லுக் போஸ்­டர் ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்!’’ என நம்­பு­வ­தாக ஸ்ரீ தே­னாண்­டாள் பிலிம்­ஸின் நிர்­வாக தயா­ரிப்­பா­ளர் ஹேமா ருக்­மணி தெரி­வித்­துள்­ளார். விஜய் பிறந்­த­நாளை முன்­னிட்டு ஜூன் 22ம் தேதி படத்­தின் பர்ஸ்ட் லுக் வெளி­யாக உள்­ளது. இந்­நி­லை­யில், படத்­தின் வெளி­யீட்டு உரி­மையை வாங்­கு­வ­தற்கு இப்­போதே பயங்­கர போட்டா போட்டி நில­வு­கி­ற­தாம். ஆனால், தேனாண்­டாள் நிறு­வ­னம் ஜூலை­யி­லி­ருந்­து­தான் வியா­பா­ரத்­தைத் துவங்க திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்­க­ளாம். வழக்­க­மான விஜய் படங்­க­ளின் பில்­டப்­பு­கள் எது­வும் இல்­லா­மல் அமை­தி­யாக இருக்­கி­ற­தாம் இப்­ப­டக்­குழு.