சாதனை படைப்பாரா கோஹ்லி?

பதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019

மான்செஸ்டர்


பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடரில் மான்செஸ்டர் நகரில் நடக்கும் நாளைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி (தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா), ஒரு ஆட்டம் (நியூசிலாந்து) ரத்தாகி உள்ளது.  இதையடுத்து இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று,  புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதுவரை 221 போட்டிகளில் விளையாடி உள்ள கோஹ்லி, 10943 ரன்கள் அடித்துள்ளார். வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி ஏற்கனவே பெற்று விட்டார். இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் 57 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய 2 பேர் மட்டுமே விரைவாக 11,000 ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாக இருந்த போதே இந்த சாதனையை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.