இலங்கை-பாக்., போட்டி ரத்து

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

பிரிஸ்டல்


உலக கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான் இடையேயான  ஆட்டம் மழையால் ரத்தானது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசி.சி.) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு     சாம்பியன் ஆஸி., இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் உள்ளிட்ட ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. இந்த மெகா தெதடரின் 11வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பயின்களான இலங்கை, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோத இருந்தன. நேற்று முன்தின இரவு முதலே பிரிஸ்டலில் மழை பெய்து வந்தது ஆடுகளம் தார்பாய் கொண்டு மூடியிருந்த போதும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்த நிலையில், இந்த போட்டியை ரத்து செய்வதாக நடுவர் அறிவித்தார். இதையடுத்து இரு அணிக்கும் தலா1 புள்ளி கிடைத்தது.

பாகிஸ்தான் அணி துவக்க ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் படுதோல்வி அடைந்தது. அதே நேரம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான போட்டி ரத்தனதால் பாக்., மொத்தம் 3 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பரிதாபமாக தோற்றது. பின் எழுச்சி பெற்ற இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை அணி 3 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது