இலங்கை-பாக்., மோதல்

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2019

பிரிஸ்டல்


உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில்,  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும்  அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

நாட்டிங்காமில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 11வது லீக் போட்டியில் முனனாள் சாம்பியன்களான இலங்கை, பாகிஸ்தான் அணிகள்மோதுகின்றன. தவரிசையில் பாக்., 6, இலங்கை 9வது இடத்தில் உள்ளன.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி வலிமையான இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எழுச்சியுடன்  விளையாடி 14 ரன்னில் வெற்றி பெற்று அசத்தியது. பாகிஸ்தான் அணியின் பலமே பேட்டிங்தான். இங்கிலாந்துக்கு எதிராக ‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள் ரன் வேட்டை  நடத்தினர். இதில், ஹபீஸ் (84), பாபர் அசாம் (63), கேப்டன் சர்பராஸ் அகமது (55) அரைசதம் அடித்தனர். இதையடுத்து பாக்., 348 ரன்கள் குவித்தது. அதே நேரம்  பாக்., பந்து வீச்சு பலவனமாகவே உள்ளது. இந்த இமாலய ஸ்கோரை சேஸ் செய்த இங்கிலாந்து கடுமையாக போராடி 334 ரன்கள் எடுத்தது, முகமது ஆமீர், வகாப் ரியாஸ் இருவரும் அதிக ரன்னை விட்டுக் கொடுக்கின்றனர். ஹசன் அலி, முகமது ஹபீஸ் இருவரது பந்துவீச்சு எடுபடவில்லை. பீல்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

நியூசிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டில் வீழ்ந்த இலங்கை அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த அணிஎயும்  பேட்டிங்கில் வலிமையாக உள்ளது. கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா, திருமானே, மெண்டிஸ் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதே நேரம்  அனுபவ வீரர் மாத்யூஸ் கடந்த இரண்டு போட்டியிலும் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி கொடுத்தார். டிசில்வா, பெரேரா இருவரும் சொதப்புவது அணியை பலவீனப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் டிக்வெலா இல்லாதது இலங்கை அணியை பலவீனப்படுத்தி உள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்த அணி அதிகம் நம்பியிருக்குச்ம் மலிங்கா தொடர்ந்து சொதப்புகிறார். இவரது பந்துவீச்சில் வேகம் குறைந்துவிட்டதால் இவரது யார்க்கரை கூட எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிக்கு விளாசுகின்றனர். லக்மல், பிரதீப் இருவர் மட்டும் வேகத்தில் அசத்துகின்றனர். இந்த அணியின் சுழற்பந்து  வீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. பந்துவீச்சுக்கு ஆதரவாக பீல்டிங்கும் இல்லை. பவுலிங், பீல்டிங் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இப்போட்டியில் ‘அனல்’ பறக்கும் என உறுதியாக நம்பலாம்.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 148 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், பாகிஸ்தான் 85, இலங்கை 58 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு  போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்துள்ளது. நான்கு போட்டிகள் ரத்தாகி உள்ளன.