பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019

சவுத்தாம்டன்


பயிற்சியில் ஈடுபட்ட பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில்தென் ஆப்ரிக்காவை இன்று எதிர்கொளகிறது,. இந்திய அணி கடந்த சிலநாட்களாகவே சவுத்தாம்டனில் தீவிர வலைபயிற்சி மேற்கொண்டு வருகிறது. எந்த ஒரு    தொடருக்கும் முதல் வெற்றி முக்கியம் என்பதால் இந்திய வீரர்கள் மனஉறுதியுடன் பயிற்சி செய்து வருகின்றனர். அதே நேரம் முதலிரண்டு போட்டியில் தோல்வியுற்ற தென் ஆப்ரிக்கா அணி இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. மாறக தோற்றால் தென் ஆப்ரிக்காவின் அரைஇறுதி கனவு தகர்ந்துவிடும். இதனால், இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை மட்டும் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்றனர். இதனை மைதானத்தில் இருந்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதலில் சிறுநீரக பரிசோதனையும், பின்னர் ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ.,) பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது உண்மைதான் என உறுதி செய்துள்ளது.

கடந்த 1975லிருந்து எந்த ஒரு இந்திய வீரருக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவில்லை. ஆனால், திடீரென பும்ராவுக்கு இப்படிப்பட்ட சோதனை  நடத்தப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தள்ளது. உலக கிரிக்கெட்டில் தற்போது ‘நம்பர்&1’ பவுலராக உள்ள பும்ரா, வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறார். கடந்த ஓராண்டாகவே மூன்று வகை கிரிக்கெட்டிலும் பும்ரா ஜொலிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், இவருக்கு மட்டும் ஊக்கமருந்து சோதனை நடத்தியது ஏன் என்பது தெரியவில்லை.