சாதிக்குமா கோஹ்லி படை...!

பதிவு செய்த நாள் : 04 ஜூன் 2019

சவுத்தாம்டன்


உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சவாலை நாளை சந்திக்கிறது. இரண்டு போட்டிகளில் தோற்ற தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. முதலில் போட்டிகள் ‘ரவுண்ட்ராபின்’ லீக் முறையில் நடக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

சவுத்தாம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ள 8வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது. தவரிசையில் இந்தியா 2, தென் ஆப்ரிக்கா 3வது இடத்தில் உள்ளன.

இந்த மெகா தொடரில் இந்திய அணி முதல் முறையாக களமிறங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதோடு பிரதான சுற்றுக்கு தன்னை தயார்படுத்திக் கெண்டது. தவிர, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்   லோகேஷ் ராகுல், தோனி இருவரும் சதம் அடித்து அசத்தினர். ராகுலின் சதம் நான்காவது வீரர் யார் என்ற பிரச்னைக்கு தீர்வாக அமைந்தது. இந்த ஆண்டு    துவக்கத்திலிருந்தே தோனியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அதோடு இவரது விக்கெட்கீப்பிங் பிரமிப்பாக உள்ளது.

இந்திய அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமபலத்துடன் உள்ளது. ரோகித் சர்மா, தவான், கேப்டன் கோஹ்லி மூவரும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா என மிடில் ஆர்டர் வரிசை சற்று வலிமையாக உள்ளது. இன்றைய போட்டிக்கான    இந்திய அணி தேர்வில் சற்று குழப்பம் நீடிக்கிறது. பயிற்சி போட்டியில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். தவிர, இங்கிலாந்து மண்ணில் ஜடேஜாவின் பந்து வீச்சு சிறப்ப5கவே இருந்துள்ளது. அதோடு, ஐ.பி.எல்., தொடரிலிருந்து பேட்டிங்கிலும் ஜடேஜா ஜொலிக்கிறார். பீல்டிங்கில் இவர் ‘நம்பர்-1’ என்பதால் இவரை அணியில் சேர்க்க இந்திய நிர்வாகம் விரும்புகிறது. அதே நேரம் ‘சைனாமேன்’ குல்தீப், சகால் இருவரும் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதால் இந்த ‘சழற்’ இரட்டையர்களை களமிறக்க கேப்டன் கோஹ்லி விரும்புகிறார். இருந்தும் ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இங்கிலாந்து ஆடுகளங்ள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா அடங்கிய ‘வேக’ கூட்டணி எதிரணிக்கு கவும் நெருக்கடி கொடுக்கும் நம்பலாம். இதில், குறிப்பாக பும்ராவின் யார்க்கர் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். சமீபகாலமாக ஷமியின்    பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டார். இன்றைய போட்டியில் விஜய் சங்கர், தினேஷ் கார்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. ஜடேஜா களமிறங்கும்பட்சத்தில் சாகல், குல்தீப் இருவரில் ஓருவருக்கே வாய்ப்பு கிடைக்கும்.

தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த அணி முதலிரண்டு போட்டியில் முறையே இங்கிலாந்து, வங்கதேசத்திடம் வீழ்ந்தது. இந்த அணி பேட்டிங்கில் சற்று வலிமையாக உள்ளது. குயின்டன் டி காக், டுபிளசி, மார்க்ராம், வான்டர் டுசன், டுமினி, மில்லர், பெலுக்வாயோ, மோரிஸ் என பேட்டிங வரிசை வலிமையாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் காயமடைந்த ஆம்லா இன்றைய போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. இவர் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

தென் ஆப்ரிக்க அணியின் பலவீனமே பவுலிங்தான். காயம் காரணமாக நட்சத்திர பவுலர் ஸ்டைன் இல்லாத நிலையில் தற்போது லுங்கிடியும் காயர் காரணமாக இன்றயை போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிரண்டு போட்டியில் ரபாடா பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. தவிர, பெலுக்வாயோ, மோரிஸ் இருவரும் சொதப்புகின்றனர். ‘சுழலில்’ இம்ரான் தாகிர் மட்டும் கைகொடுக்கிறார். பலவீனமான பந்துவீச்சுக்கு ஆதரவாக பீல்டிங் இல்லை.

இன்றைய போட்டி குறித்து தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி கூறியதாவதுது: உலக கோப்பை தொடரில் முதல் இரு போட்டியில் தோற்றதால் எழுச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர முயற்சிப்போம். வங்கதேசத்துக்கு எதிராக தோற்றது மிக ஏமாற்றமாக உள்ளது. இதில் அதிர்ஷ்டம் இல்லை என்று கூற மாட்டேன். இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அடுத்து வலிமையான இந்திய அணியை இன்று சந்திக்கவுள்ளோம். தற்போதைய நிலையில் ஒரு அணியாக மோசமாக உள்ளோம். எனினும் இந்திய அணியை சமாளிக்க புதிய திட்டத்துடன் வருவோம். இவ்வாறு டுபிளசி கூறினார்.

முதல் வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 83 போட்டிகளில் மோதி உள்ளது. இதில், தென் ஆப்ரிக்கா 46, இந்தியா 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் ரத்தாகி உள்ளது.