உலக கோப்பை கிரிக்கெட் 2 போட்டி : நியூசிலாந்து- இலங்கை, அஸ்திரேலிய- ஆப்கான் அணி மோதல்

பதிவு செய்த நாள் : 01 ஜூன் 2019

கார்டிப்,

   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

நேற்று 31ம் தேதி நடந்து முடிந்த 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று 2 பேட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதல் போட்டி கார்டிஃப் நகரில்  3 மணிக்கு நியூசிலாந்து - இலங்கை அணி மோதுகின்றன.

2வது போட்டி பிரிஸ்டலில் மாலை 6 மணிக்கு அஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் அணி மோதுகின்றன.

முதல் போட்டி நியூசிலாந்து- இலங்கை

கருணாரத்னே தலைமையிலான இலங்கை மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இலங்கை அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து அணி வெற்றிபெற 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயத்துள்ளது இலங்கை அணி.