பாகிஸ்தானிடம் நியூசி., ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 27 ஜூன் 2019

பர்மிங்காம்


உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து தனதுமுதல் தோல்வியை பேற்று சந்தித்தது. பாகிஸதானுக்கு எதிராக 6 விக்கெட்டில் வீழ்ந்தது. பாபர் ஆசம் சதம் அடித்து  அசத்தினார்.

ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன.  பர்மிங்காமில நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து மோதியது. இப்போட்டியில் வெற்றி பெறவேண்டிய  நெருக்கடியில் பாகிஸ்தான் இருந்தது. அதே நேரம் இந்த தொடரில் நியூசிலாந்து ஒருபோட்டியில் கூட தோற்காமல் விளையாடி வருகிறது. மழை காரணமாக ஆட்டம்  ஒருமணி நேரம் தாமதமாக துவங்கியது. இருநதும் போட்டி 50 ஓவர்களாக நடத்தப்பட்டது. இதில், ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில்  ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் ஏதும் இல்லை.

நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். அப்ரிதி வேகத்தில்; கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. இருந்தும் ஒருமுனையில் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தும் கடந்த போட்டியில் சதம் அடித்த வில்லியம்சன் இம்முறை ஏமாற்றினார். ஷதாப் கான் சுழலில் வில்லியம்சன் (41) சிக்கினார். பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது கிராண்ட்ஹோம் (64) ரன் அவுட் ஆனார். முடிவில்  நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது. நீஷம் (97), சான்ட்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிதான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (9) ஏமாற்றினார். இவர் பவுல்ட் வேகத்தில் சரிந்தார். பெர்குசன் பந்தில் இமாம் உல் ஹக் (19) ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இளம் வீரர் பாபர் ஆசமுடன் அனுபவ வீரர் முகமது ஹபீஸ் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி  ரன் எடுத்து வந்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில், வில்லியம்சன் பந்தில் முகமது ஹபீஸ் (32) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.  இருந்தும் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார். இவருக்கு கம்பெனி கொடுத்த ஹாரிஸ் சோகைலும் அரைசதம்  அடித்து அசத்தினார். 42வது ஓவரில் பாக்., 200 ரன் எடுத்த போது அணியின் வெற்றி உறுதியானது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் ஒருநாள் போட்டியில் தனது 10வது சதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இவர் 124 பந்தில்சதம் அடித்தார். வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில், ஹாரிஸ் சோகைல் (68) பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

முடிவில் பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபர் ஆசம் (101), சர்பராஸ் அகமது (5) அவுட்டாகாமல்  இருந்தனர். நியூசி., தரப்பில் பவுல்ட். பெர்குசன், வில்லியம்சன் தலா 1 விக்கெட் சாய்த்தனர். சதம் அடித்த பாபர் சம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.