நடிகர் தனுஷுடன் மோதும் சந்தானம் !!

23 ஜனவரி 2021, 01:12 PM

தமிழ சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ், சந்தானம். ஒருகாலத்தில் தனுஷ் போன்ற நடிகர்கள் படத்தில் தவிர்க்க முடியாத காமெடிய நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய சந்தானம் இப்போது தனுஷுக்கு போட்டியாளராக மாறியுள்ளார்.

அதாவது தனுஷ், சந்தானம் ஆகிய இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாம். விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸாகி நல்ல வசூலைப் பெற்றதால் பிரபல நடிகர்களின் படங்களும் தியேட்டரில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜமமே மந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

அதேபோல் நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படமும் பிப்.,14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை ஏ 1படத்தை இயக்கிய ஜசன் கே என்பவர் இயக்கியுள்ளார். இதனால் ஒரேநாளில் வெளியாகவுள்ள இரு படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.