முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்திசுரேஷ்.. நாங்களா இருக்க கூடாதா என ஏங்கும் நெட்டிசன்கள்

23 ஜனவரி 2021, 01:11 PM

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். வளர்ந்து வரும் நடிகரான விக்ரம் பிரபு படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி ஓரளவு ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது குடும்ப நண்பர்களுடனும், அவர் வளர்த்துவரும் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஹக்கிங் டே ஸ்பெஷல்லாக அவர் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய் குட்டியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நாயக்கே இப்படி முத்தம் கொடுக்கிறார். அந்த நாயாக நாம் இருந்தால் எப்படி இருக்கும் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்திசுரேஷ் வைத்திருக்கும் நாய் கொடுத்து வச்ச நாய் எனவும் தங்களது ஆதங்கங்கத்தை தெரிவித்து வருகின்றனர்