தளபதி ரசிகர்களே 5 மணிக்கு அலார்ட்டா இருங்க... "மாஸ்டர்" கேள்விகளை மாளவிகாவிடம் கேளுங்க!

12 ஜனவரி 2021, 01:15 PM

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.


இதற்கிடையில் ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். எனவே, தளபதி ரசிகர்களே...மாஸ்டர் குறித்த கேள்விகளை கேட்கணுமா? இப்போவே ரெடி பண்ணி வச்சுட்டு அலார்ட்டா இருங்க...