'ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம் - திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு!

12 ஜனவரி 2021, 10:04 AM

பொங்கலை முன்னிட்டு, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படமும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'ஈஸ்வரன்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், 'ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓ.டி.டி.யில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், 'ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் 'ஈஸ்வரன்' படத்திற்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.