சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் கலக்கும் பிக் பாஸ் ஆரி ரசிகர்கள்

11 ஜனவரி 2021, 11:34 AM

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 


இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்..

. கடவுள் இருக்கான் குமாரு” என்ற வசனங்கள் அடங்கிய பதாகையுடன் ஆரி ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.