சைக்கிளில் சென்ற தமிழ் ஹீரோவிடம் இருந்து செல்போனை பறித்த மர்ம நபர்கள்!

03 டிசம்பர் 2020, 07:57 AM

பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் சைக்கிளில் சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவருடைய விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

90களின் பிரபல ஹீரோவான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தற்போது தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கின் செல்போனை மர்ம நபர்கள் இருவர் பறித்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென வழிமறித்த இருவர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றதாகவும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கௌதம் கார்த்திக்கின் செல்போனை பறித்து சென்ற 2 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.