சூர்யா நடிப்புக்கு பாராட்டு தெரிவித்த டேவிட் வார்னர்: வைரலாகும் வீடியோ!

03 டிசம்பர் 2020, 07:51 AM

தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக நடிக்க தெரிந்த நடிகர்கள், ஒரு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டால் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்ற பெயரை பெற்ற நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது திறமையான நடிப்பினாலும் ஒரு படத்தில் எடுத்து கொண்ட கேரக்டராகவே மாறிவிடும் நடிகராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் ’சூரரைப்போற்று’ படத்தில் ’மாறன்’ கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் சூர்யாவின் நடிப்பு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நடிகரும் முகத்தில் மகிழ்ச்சியை கண்ணீருடன் தெரிவித்தவர் இல்லை என்றும் கண்ணீரில் மகிழ்ச்சியான முகத்தை நடிப்பில் வெளிப்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டேவிட் வார்னரின் இந்த பதிவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.