எஸ்.பி.பி.பெயரில் ரிக்கார்டிங் ஸ்டூடியோவை ராதா ரவி திறப்பு

20 நவம்பர் 2020, 11:25 PM

மறைந்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைவு கூறும் வகையில் தென்னிந்தி சினிமா, சின்னத்திரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் ரிக்கார்ட்டிங் ஸ்டூடியோ திறக்கப்படும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று அதன் திறப்பு விழா நடந்தது.

இதனை டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் இந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது இந்த சங்கத்திற்கு பெருமை. அவர் பெயரில் இந்த ஸ்டூடியோ திறக்கப்படுவது, அவருக்கு செய்யும் மரியாதை மட்டும் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்கிற மரியாதை, பெருமை. என்றார்.