இது தமிழில் என் முதல் படம்! - ராஷ்மிகா மகிழ்ச்சி

27 அக்டோபர் 2020, 07:35 AM

தமிழ்சினிமாவில் நயன்தாராவை போல் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா.

இப்போதுள்ள இளம் நடிகைகளில் அவர்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமாகிறார். 

'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். 'சுல்தான்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. போஸ்டரைப் பகிர்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார் .

கார்த்தி சார், உங்கள் லுக் பயமுறுத்துகிறது. 'சுல்தான்' படம் பற்றி சில வார்த்தைகள். இது என்னுடைய முதல் தமிழ்ப்படம். நான் சிறு பெண்ணாக இருந்த போது அப்பாவுடன் பல தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.