சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட திருநங்கைக்கு பிரியாணி கடை வைத்துக் கொடுத்த நடிகர்!

17 அக்டோபர் 2020, 09:20 PM

கேரள மாநிலம் கொச்சியில் சஞ்சனா ஷாதி என்கிற திருநங்கை சாலையோரம் பிரியாணி கடை நடத்தி வந்தார். 

சில சமூக விரோதிகள் அவர் பிரியாணி விற்பனை செய்வதை எதிர்த்தும், அதை தடை செய்யும் விதமாக அடாவடி செய்து வந்தவர்கள் சமீபத்தில் அவரை தாக்கவும் செய்து, அவரது கடையை அடித்து உடைத்தும் சஞ்சனாவை தாக்கியும் உள்ளார்கள். 

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேகே.சைலஜா இதில் தலையிட்டு தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சஞ்சனா ஷாதிக்கு நிவாரணம் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிரபல நடிகர் ஜெயசூர்யா, திருநங்கை சஞ்சனா ஷாஜிக்கு பிரியாணி நடத்துவதற்கான தனி கடை ஒன்றையே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 

அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.