காதல் திருமணத்திற்கு தயாராகும் அதர்வா!

17 அக்டோபர் 2020, 08:08 AM

பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  

இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.