விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகன்!

17 அக்டோபர் 2020, 08:04 AM

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனரான இயக்குனர் பிரியதர்ஷன், தமிழ் ரசிகர்களிடமும் பரிச்சயமானவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவரது மனைவி லிசி முன்னாள் கதாநாயகி என்பதும் பலருக்குத் தெரியும். இவர்களது மகள் கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என மும்மொழிகளிலும் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகள் பட்டியலில் பிரியதர்ஷனின் மகனான சித்தார்த்துக்கும் ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. மோகன்லால் நடிப்பில் தனது தந்தை இயக்கத்தில் உருவாகியுள்ள, இன்னும் வெளியாகாத, 'மரைக்கார்' படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளுக்கான சிறப்பு விருதைத்தான் சித்தார்த் பெற்றுள்ளார்.

அமெரிக்கா சென்ற விஎப்எக்ஸ் படிப்பை முடித்துவிட்டு வந்த சித்தார்த், நேரடியாக தனது தந்தை இயக்கி வந்த 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்தில் விஎப்எஸ் சூப்பர்வைசராக பணியாற்றினார். முதல்படமே வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் மிகவும் நேர்த்தியாக தனது வேலையை செய்துள்ளார் சித்தார்த். அதற்கு கௌரவம் செய்யும் விதமாகத்தான், தற்போது அவருக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பொதுவாகவே இயக்குனரின் மகன் என்றால் நடிகராகவும் இயக்குனராகவும் மாறுவார்கள் என்கிற வழக்கமான பார்முலாவை, சித்தார்த் பிரியதர்ஷன் மாற்றிக் காட்டி உள்ளார் என்றே கூறலாம்.