அப்பா கமல், அக்கா ஸ்ருதி ஹாசன் இருவரையும் இயக்க விருப்பம் - அக்ஷரா ஹாசன்

17 அக்டோபர் 2020, 07:58 AM

சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் ஆண், பெண் என பாகுபாடு பார்க்காமல் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள நடிகை அக் ஷரா ஹாசன், ஊரடங்கு நேரத்தில் நிறைய புத்தகங்களை படித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராகும் முயற்சியில், சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், அப்பா கமல், அக்கா ஸ்ருதி ஹாசனை இயக்க விரும்புவதாக கூறியுள்ளார்.