கண்மணியே எனும் பாடலை எழுதி இயக்கி தயாரித்து பாடி யூடியூப்யில் வெளியிட்ட அருண்ராஜா காமராஜ்!

17 அக்டோபர் 2020, 07:55 AM

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட சிலரில் அருண்ராஜா காமராஜ் என்பவரும் ஒருவர்.

தற்போது சுயாதீன பாடலுக்கு தயாரிப்பாளராகவும் உள்ளார். சமீபத்தில் இவர், 'கண்மணியே...' என்ற பாடலை எழுதியதோடு, இயக்கி, தயாரித்து, பாடி தன், 'யு -டியூப் சேனல்' மூலம் வெளியிட்டுள்ளார். இதில், நடிகர் பரத், மாடல் அழகி கிருத்திகா பாபு நடித்துள்ளனர்.