ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற "சைலன்ஸ்" மூவி டிரைலர்!

22 செப்டம்பர் 2020, 07:10 AM

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் படம் 'சைலன்ஸ்'. வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடியில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

காது கேட்காத, வாய் பேச முடியாத ஓவிய கலைஞரான அனுஷ்கா, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்குகிறார். அதன்பின் நிகழும் சஸ்பென்ஸ், திரில்லரே படத்தின் கதை என்று கூறப்பட்டு வருகிறது.