இந்தி திரையுலகம் தான் பெரியது என்பது தவறான கருத்து - கங்கனா ரணாவத்

20 செப்டம்பர் 2020, 07:21 AM

சமீபத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டிலேயே சிறந்த பிலிம் சிட்டி ஒன்றை உருவாக்க உள்ளோம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளதாவது:

“இந்தியாவிலேயே இந்தி திரையுலகம்தான் பெரிது என மக்களின் மனதில் தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால், தெலுங்குத் திரையுலகம் தானாகவே முன்னேறி உயர்ந்த இடத்தைப் பிடித்து, இந்திய அளவில் பல மொழிகளில் படத்தை வெளியிடுகிறது. 

உபி முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். திரையுலகில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்தியத் திரையுலகம் என ஒரு திரையுலகத்தை நாம் அழைக்க வேண்டும். பலவற்றால் நாம் வேறுபட்டு இருக்கிறோம். அதனால், ஹாலிவுட் படங்கள் நன்மை அடைகின்றன. ஒரு திரையுலகம் ஆனால், பல திரைப்பட நகரங்கள். பல சிறந்த டப்பிங் படங்கள் இந்திய அளவில் வெளியாகவில்லை, அதே சமயம் ஹாலிவுட் படங்கள் அதுபோல் வெளியாகின்றன.

மேலும் ஹாலிவுட் படங்கள் மீது மீடியா உருவாக்கும் கற்பனையும் தான் காரணம்,” என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.