தமிழில் அறிமுகமாகும் பெங்காலி நடிகை!

18 செப்டம்பர் 2020, 08:29 PM

அறிமுகமான சில ஆண்டுகளில் 10 பெங்காலி படங்களில் நடித்து முடித்துள்ளார் பெங்காலி  மொழி படங்களில் வளர்ந்து வரும் இளம் நடிகை தர்ஷனா பாணிக்.

ஆட்டகலு என்ற தெலுங்கு படத்திலும், எஸ்ட்ரா என்ற இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். யாருக்கும் அஞ்சேல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இதனை புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஹீரோ கிடையாது. பிந்து மாதவியும், தர்ஷனா பாணிக்கும் ஹீரோயின்கள்.

கொல்கத்தாவில் வசித்து வரும் பிந்து மாதவியும், தர்ஷனா பாணிக்கும் உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் இருவரும் ஊட்டியில் உள்ள தங்களது பூர்வீக பங்களா ஒன்றை விற்பதற்காக வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவங்கள்தான் படத்தின் கதை எனக் கூறப்பட்டு வருகிறது.