ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து "ஷாக்" சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

18 செப்டம்பர் 2020, 08:25 PM

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.

எப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருந்து வரும் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

ரசிகர்களை தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார் ஷாலு ஷம்மு.