கால் முட்டி வரை புதைக்கப்பட்ட கமலஹாசன், சர்க்கசில் ஏற்கனவே ஒரு குழந்தையை கொன்ற புலியை வைத்து எடுக்கப்பட்ட காட்சி! அபூர்வ சகோதரர்கள் படம் குறித்து ஓபன் டாக்!

16 செப்டம்பர் 2020, 11:32 AM

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளதால் ரசிகர்களால் செல்லமாக உலகநாயகன் என அழைக்கப்படும் பிரபல நடிகர் தான் கமலஹாசன்.

இவரின் வித்தியாசமான நடிப்பு திறமையின் மூலம் சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள்.

இந்த படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி, ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. உலக திரைப்பட வரலாற்றிலேயே குள்ள தோற்றத்தில் நடித்தவர் கமலஹாசன் மட்டும் தான் என்ற பெருமையும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்திய இணையதள பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இந்த படத்தில் வரும் புலி குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

அந்த காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் கிடையாது. படப்பிடிப்பின் அந்த சமயத்தில் என்ன நடிக்கிறோமோ அதான்.

இப்படத்தில் புலியுடன் எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் நடிகர் கமல் முட்டி வரை புதைக்கப்பட்டு இருந்தார். அந்த புலியின் ட்ரைனர் என் அருகில் இருந்தார். அந்த ஷாட் எடுக்கும் போது தான் மேனேஜர் கல்கத்தாவில் நடந்த ஒரு விஷயத்தை சொன்னார். அந்த புலி, சர்க்கஸில் இருக்கும் போது ஒரு குழந்தை ஒன்று திடீரென்று ஓடி போகும் போது அந்த புலி அந்த குழந்தை மீது பாய்ந்து அந்த குழந்தைக்கு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

அந்தக் காட்சியை எடுத்து முடிக்கும் வரை நெஞ்சு பதைபதைத்தது, இந்த காட்சியில் துணிச்சலாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் கமலஹாசன் எனவும் பாராட்டியிருந்தார்.