உன் அம்மாவின் முகத்தில் தெரியும் அந்த புன்னகை... நயன்தாராவிடம் உருகும் விக்னேஷ் சிவன்!

16 செப்டம்பர் 2020, 11:22 AM

சமீப நாட்களாக கோவாவில் குடும்பத்துடனும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடனும் சேர்ந்து பொழுதை போக்கி வருகிறார் நடிகை நயன்தாரா. இந்நிலையில் நேற்று தனது தாயின் பிறந்தநாளையும் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

மேலும் தன் சமூக வலைத்தளத்தில் நயன்தாரா அம்மாவின் இன்னொரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், 

“உன் அம்மாவின் முகத்தில் தெரியும் அந்த புன்னகை உன் இதயத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு சரிவிகித சமமானது. உன்னுடைய பெற்றோரின் சந்தோஷத்தை போல வேறெதுவும் உனக்கு திருப்தியையும் மனநிறைவையும் தராது.. உன் பெற்றோரை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதே உன் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்” 

என நயன்தாராவுக்கு உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.