தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்யாகிருஷ்ணன்!

16 செப்டம்பர் 2020, 07:05 AM

கொரோனா தொற்று பயம் காரணமாக பல கொண்டாட்டங்கள் சினிமாவில் கடந்த சில மாதங்களாக நடைபெறுவதில்லை. 

பிறந்தநாள் பார்ட்டி என்பதை தற்போது இல்லை என்றே கூறலாம்.

இந்நிலையில், தமிழ், தெலுங்குத் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகையான ரம்யா கிருஷ்ணன் அவருடைய பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவருடைய பிறந்தநாளுக்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.