ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், திறந்து பார்த்தால் கற்கள் பிரபல இசை அமைப்பாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

15 செப்டம்பர் 2020, 08:14 PM

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய கைதி திரைப்படம் உள்பட வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்த இசையமைக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

தனக்கு நேர்ந்த சம்பவத்தை அவர் கூறியதாவது: 

"என்னுடைய சகோதரனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தேன். அது வந்த போது அதை திறந்து பார்த்து அதிர்ச்சியானோம். அதில் கற்களை மிக அழகாக பேக் செய்து அனுப்பி இருந்தார்கள். அது பற்றி சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் புகார் அளித்த போது அவர்கள் எங்களது புகாரை நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என கூறி விட்டனர். இதனால் தயவு செய்து அந்த நிறுவனத்திலிருந்து வாங்காதீர்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என சாம்.சி.எஸ் விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.