படப்பிடிப்பின்போது நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி மூழ்கிய ஜாக்கிஜான், படக்குழு அதிர்ச்சி!

15 செப்டம்பர் 2020, 04:34 PM

ஜாக்கி சான் தற்போது நடித்து வரும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. 

அப்போது காட்டாற்று வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சானும் மியாவும் வெள்ளத்தில் மூழ்கினர்.

அவர்களை காப்பாற்ற பாதுகாவலர்கள் உடனடியாக தண்ணீரில் குதித்தனர். மியா சிறிது நேரத்தில் மேலே தோன்றினார். ஆனால் சுமார் 45 விநாடிகள், ஜாக்கி சான் எங்கும் காணப்படவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்த பரபரப்பான காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு படக்குழு படப்பிடிப்பை தள்ளி வைக்க முயற்சிக்க, ஜாக்கிஜான் தொடர்ந்து நடித்து அசத்தலாக அந்த ஆக்ஷன் காட்சியை முடித்துக் கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.