இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில், தன் அழகால் ரசிகர்களை வசீகரிக்கும் செய்திவாசிப்பாளர்!

15 செப்டம்பர் 2020, 01:45 PM

தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யா துரைசாமி.


பள்ளி படிக்கும் பருவத்திலேயே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் நுழைவோம் என நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.


படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.


சில வருடங்கள் அங்கு பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு தந்தி டிவியிலும் பணிபுரிந்த இவர் தற்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சி காட்டி ரசிகர்களை இழுக்கும் நடிகைகளுக்கு மத்தியில், இவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.