திடீரென புற்று நோயால் உயிரிழந்த பாலிவுட் பிரபலம்!

13 ஆகஸ்ட் 2020, 10:28 AM

பிரபல முன்னாள் மாடலும் பாலிவுட் பேஷன் டிசைனருமான சிமர் துகல் திடீரென மரணமடைந்திருப்பது பாலிவுட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சிமர் துகல் கடந்த சில வருடங்களாக கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். 

அவருக்கு வயது 52. அவர் மறைவை அடுத்து, பிரபல பாலிவுட் நடிகைகள் மலைகா அரோரா, லாரா தத்தா உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

'என் கண்கள் கண்ணீரை நிறுத்தவில்லை. என் அழகிய தோழி, என் தேவதை, அதிக இரக்கம் கொண்டவர் சிமர். உன் இழப்பால் வாடுகிறேன்' என்று நடிகை மலைகா அரோரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.