தெளலத் திரைப்படத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - யோகி பாபு

13 ஆகஸ்ட் 2020, 06:14 AM

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு.

இந்நிலையில், யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதன் காரணமாக அவர் நடித்த பழைய படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘தெளலத்’ என்ற படம் விரைவில் வெளிவர இருப்பதாக யோகிபாபுவின் புகைப்படத்துடன் இன்று விளம்பரம் வெளிவந்துள்ளது. 

இது குறித்து கருத்து கூறிய யோகி பாபு ’இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.