விஜய்யின் மெர்சல், பிகில் திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியாம், அடுத்த இன்னிங்சை தொடங்கிய மீரா மிதுன்!!

04 ஆகஸ்ட் 2020, 07:31 PM

சர்ச்சை பேச்சுக்களுக்கு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் சூர்யாவைப் பற்றி விமர்சித்த மீரா மிதுன் பேச்சு, ரசிகர்களிடையே மிகப் பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது விஜயின் பக்கம் திரும்பியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என விஜய்யையும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் விமர்சித்து வரும் இவர், விஜய் குறித்து தற்போது லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.


அதில், “விஜய்யின் முந்தைய படங்களான மெர்சல், பிகில் ஆகிய படங்களை தயாரித்தவர்களுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. அதனால் தான் அவர்கள் அடுத்ததாக படம் தயாரிக்கவில்லை. இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் இவர்களது நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி கொள்வதாகவும் அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை தந்து ஏற்கனவே தங்களால் ஏற்பட்ட நட்டத்தை சரிக்கட்டி விடுவதாகவும் விஜய்யும் அவரது தந்தையும் பேசி இருக்கிறார்கள் என்று கூறி புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.