ஒரு வருடம் சுஷாந்த் உடன் "லிவிங்-டு-கெதர்" ஆக வாழ்ந்தேன் - ரகசியம் உடைத்த ரியா சக்ரவர்த்தி

01 ஆகஸ்ட் 2020, 08:08 AM

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் அப்பா, சுஷாந்த் காதலி என்று சொல்லப்படும் ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் கொடுத்துள்ளார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என ரியா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

“சுஷாந்துடன் நான் கடந்த ஒரு வருட காலமாக 'லிவிங்-டு-கெதர்' ஆக ஜுன் 8 வரை வாழ்ந்துள்ளேன். அதன்பின் அவர் வீட்டை விட்டு வெளியேறினேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாக” அந்த மனுவில் ரியா குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தன்னைத் துன்புறுத்தவே இப்படி ஒரு புகாரை சுஷாந்த் அப்பா கொடுத்துள்ளதாக அவர் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார் ரியா.