நிஜ வாழ்க்கையில் நடிக்க விரும்பவில்லை, ஓவியாவின் ஓபன் டாக்.

11 ஜூலை 2020, 07:43 AM

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நடிகை ஓவியாவின் வாழ்க்கை மிகப்பெரிய திருப்பு முனையாக மாறியது.

அவருக்கு என்ற தனிப்பட்ட ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.

சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் சாட்டிங் செய்த ஓவியாவிடம், நீங்கள் ஏன் சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை என்கிற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த ஓவியா, “எனக்கு உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் பவர் கிடைக்காதவரையில் அந்த விஷயங்களில் குரல் கொடுக்க விரும்பவில்லை. சொல்லப்போனால் நிஜ வாழக்கையில் நான் நடிக்க விரும்பவில்லை” என்று ஓப்பனாக கூறியுள்ளார்.