அம்மாவாகிய பிக்பாஸ் புகழ் ரம்யா!

11 ஜூலை 2020, 07:41 AM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டின் போட்டியாளரும், பிரபல பின்னணிப் பாடகியுமான என்எஸ்கே ரம்யா அவருக்கும் டிவி நடிகருமான சத்யா என்பவருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் , ரம்யா தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக குடும்பப் புகைப்படத்தைப் இன்று பதிவிட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

நான் ஏன் அதிகமாக வெயிட் போட்டுவிட்டேன் என பலரும் அடிக்கடி கேட்டு வந்தார்கள். சீக்கிரம் அது பற்றி தெரிவிக்கிறேன் என அவர்களுக்கு பதிலளித்து வந்தேன். அது இதுதான், நான் சமீபத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதற்குப் பிறகு எனது உடல்நலம் மீதும், வொர்க்அவுட் மீதும் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.