செம்பருத்தி சீரியல் நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமண நிச்சயதார்த்தம்!

05 ஜூலை 2020, 08:53 AM

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் பிரபல தொடர் செம்பருத்தி. 

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் நாயகன் ஆதியின் தம்பியாக நடித்து வருகிறார் தொகுப்பாளர் கதிர். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் குறும்புத்தனமான நடிப்பால் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில் கதிர் சத்தமில்லாமல் தனது திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

தனத வருங்கால மனைவியுடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு கதிர் கூறியிருப்பதாவது: எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். லாக்டவுன் நேரத்தில் உள்ள இ-பாஸ் பிரச்சனைகள் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லாரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்து கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துக்களையும் பெற காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.