போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது! - சின்மயி

05 ஜூலை 2020, 08:35 AM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்களிடையே பீதி நிலவி வரும் இந்நிலையில், மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு கண்டன குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் தற்போது சசிகலா என்ற பெண்ணும் நான்கு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலாவுக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலர் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். 

பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.